‘Onmax DT’ பிரமிட் திட்டத்தின் நிருவாகி துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கயான் விக்ரமதிலக்க என்பவரே கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .
இலங்கை மத்திய வங்கியினால் தடை செய்யப்பட 09 பிரமிட் நிறுவனங்களில் ‘Onmax DT’ நிறுவனமும் ஒன்றாகும்.
இந்த நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ‘Onmax DT’நிறுவனத்தின் பணிப்பாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com