திருகோணமலையில், வறுமை கோட்டின் கீழ் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Aarani Editor
1 Min Read
கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்து, வறுமை கோட்டின் கீழ் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மூதூர் – கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது.

கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சு.தீபராஜ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது 17 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 300 மாணவர்களுக்கு , தலா 2500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை – கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம், தனவந்தர்களின் உதவியுடன் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்த மாணவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *