தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பது தெற்காசிய நாடுகள் இடையிலான வர்த்தக பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தமாகும்.
இது தெற்காசிய நாடுகளின் சமூகவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாக காணப்படுகின்றது.
தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் தயாரிப்புகளை அதிகமாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு, அதன் தலைவர் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும தலைமையில் கூடி கவனம் செளித்தியது.
இங்கு தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களால் பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பது குறித்து பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள அனைத்து வர்த்தகர்களும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு வருவதால், தேவையான விழிப்புணர்வு ஏற்கனவே அங்கு வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், அதற்கு அப்பாலும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியம் எனவும் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.
வர்த்தகங்களைப் பதிவு செய்யும் போதே இது தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்று குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
இதற்கு அரச அதிகாரிகள் பாரம்பரிய முறைகளுக்கு அப்பால் பணியாற்ற வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், இதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com