பெருமைமிக்க எதிர்காலத்தை உருவாக்க புத்தாக்கம் மிக அவசியமானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ‘புத்தாக்க மாநாடு 2025’ நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார் .
பருவநிலை மாற்றம், பொருளாதார ஸ்திரமற்ற தன்மை, தொழில்நுட்ப சீர்குலைவுகள் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியதோடு, அந்த சவால்களை வெற்றிக் கொள்ள வாய்ப்புக்களும் உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
2025ஆம் ஆண்டுக்கான புத்தாக்க மாநாடும் அவ்வாறானதொரு வாய்ப்பை இலங்கை போன்ற சிறிய தீவுகளுக்கு வழங்குவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், நாடு மாற்றத்திற்குள்ளாகி வரும் நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான புத்தாக்க மாநாடு இலங்கையில் நடைபெறுகின்றமை அந்த மாற்றங்களுக்கான அதிகரித்த வாய்ப்புக்களை வழங்கும் எனவும் பிரதமர் கூறினார்.
Link : https://namathulk.com