கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்கரையை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இன்று ‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பூநகரி பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், இராணுவத்தினர், பொலிசார், கடற்படையினர், மாணவர்கள், பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, நாடு முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றால் குப்பைகளை மட்டுமல்ல இனவாதம், மதவாதம், ஊழல், மோசடிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
எனவே, சூழலை சுத்தப்படுத்துவது போல் எமது ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள் ஆகியோர், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன், க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் வெற்றியளிப்பதற்கு முழு அர்பணிப்புடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தனியார் பங்களிப்பும் இருந்தால் அது மேலும் சிறப்பாக அமையும் என கூறினார்.









Link: https://namathulk.com