இலங்கையில் சமீபக்காலங்களில் பாதள குழுக்களின் அத்துமீறிய செயற்பாடுகளும், நீதிமன்றத்துக்குள் இடம்பெறும் கொலைகளும் இலங்கையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்நிலையில், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் செயற்பாடுகள் முறியடிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தல்களை வழங்கியது.
அந்தவகையில், அரசியல் அனுசரணையில் வளர்ச்சி கண்ட பாதாள குழுக்களை முழுமையாக கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையை இன்று தரிசித்த பின்பே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, உள்ளூராட்சி தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எந்தவித சட்ட ரீதியான தடைகளும் இல்லையென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், அதற்கு தேவையான நிதியையும் அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படுமெனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.








Link: https://namathulk.com