எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு, குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம் வழங்குமாறு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று இடம்பெற்றபோதே இந்த தீர்மானம் ஏடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் கலந்துகொண்டார்.
இந்த கோரிக்கைகள் தொடர்பில் சபாநாயகரினால் 2025.02.19 ஆம் திகதி சபையில் அறிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பான, ஆளும்கட்சியின் நிலைப்பாட்டை சபை முதல்வர் சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்ததுடன், அந்த கடிதம் இதன்போது வாசிக்கப்பட்டது.
அதனையடுத்து, குழுக்களில் எதிர்க்கட்சியின் அங்கத்துவத்தை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சி முதற்கோலாசான் விடுத்த கோரிக்கை தொடர்பில் சாதகமாக கருத்திற்கொண்டு ஆளும்கட்சியின் தீர்மானத்தை விரைவாக வழங்குவதாக சபை முதல்வர் இந்தக் கூட்டத்தில் மேலும் தெரிவித்தார்.









Link: https://namathulk.com