நிதியமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால், அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கைத்தொழில் துறைகளுக்கென்று விசேட சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோல, இந்த ஆண்டு இறுதிக்குள் தேசிய வரிக் கொள்கையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்நெத்தி கூறியுள்ளார்.
அதற்கமைவாக, கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேசிய கைத்தொழில் விசேட விருது விழா 2024’ நிகழ்வு கொழம்பில் இடம்பெற்றது.
இதன்போது, வர்த்தகங்களை பாதுகாக்கவும், அவற்றை முன்னேற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்கவும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற வகையில் கைத்தொழில்களை பாதுகாக்கவும், கைத்தொழில்களின் வளர்ச்சிக்கு தேவையான ஆதரவை வழங்கவும் செயற்பட்டு வருவதாக பிரதமர் வலியுறுத்தினார்.
அத்துடன், கைத்தொழில்கள் பொருளாதார துறையை பலப்படுத்துவது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளையும் உருவாக்க வழிவகுப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கையில் பொருளாதார பலத்தை கட்டியெழுப்புவதற்கு பெண்களின் தொழில்முயற்சிகள் மிகவும் முக்கியமானது எனவும் பிரதமர் தெரிவித்தார்.
பாடசாலை மட்டத்திலிருந்தே தொழில் முயற்சியின் வளர்ச்சி, ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல், அனைத்து தொழில்துறைகளையும் கட்டியெழுப்புதல் போன்றவற்றின் மூலம் நாட்டில் தொழில்துறை ஆர்வத்தை உருவாக்க எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்நெத்தி இதன்போது வலியுறுத்தினார்.











Link: https://namathulk.com