நாட்டை உலுக்கிய கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் நாளுக்கு நாள் பல்வேறுபட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.
இந்நிலையில் பாதாள உலக குழுவின் தலைவரான சஞ்சீவவை சுட்டுக் கொல்வதற்காக துப்பாக்கியை வழங்கிய பெண் இதுவரை கைது செய்யப்படவில்லை.
குறித்த பெண் இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவருடைய பல நிழற்படங்களை தற்போது பொலிசார் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
இந்த சந்தேகநபரான பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.
அந்தவகையில் 0718591727,
0718591735 ஆகிய இலக்கங்களுக்கு தகவல்களை வழங்க முடியும்
கடந்த 19 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து பாதாள உலக குழுவின் தலைவரான சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துரித விசாரணையில் துப்பாக்கிதாரி பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கிதாரிக்கு நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியை எடுத்துச் செல்ல உதவிய பெண் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள நிலையில், இவர்களுக்கு உதவி, ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் விளக்கம்மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்கள் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Link : https://namathulk.com