கிளிநொச்சி பரந்தன் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த லொரி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் 400 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
லொரியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து குறித்த கேரள கஞ்சா கொண்டு செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com