கொழும்பு -02, கொம்பனித்தெரு பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சீன பிரஜையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விடுதியின் 22ஆவது மாடியில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, உயிரிழந்தவரின் சடலம் சொகுசு ஹோட்டலின் 22 வது மாடியில் கண்டெடுக்கப்பட்டது.
46 வயதான சீன பிரஜை ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com