கொழும்பு கொட்டாஞ்சேனை துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு -15, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனையில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு துப்பாக்கி மற்றும் ரவைகளை குறித்த சந்தேகநபரே, துப்பாக்கிதாரியிடம் வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கும், நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபரே துப்பாக்கி வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து இலங்கைக்குள் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் ஒருவரின் வழிநடத்தலின் கீழ், குறித்த சந்தேகநபர் கொழும்பில் பல குற்றச்செயல்களை வழிநடத்தி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த 21 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் கடைக்குள் இருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அன்றைய தினமே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர்கள் இருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com