அமெரிக்காவின் முடிவுகளால் உக்ரைனின் ஆட்சி நடவடிக்கைகளில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் நாட்டினுடைய அமைதிக்காக தனது பதவியை இழப்பதற்கும் தயாராக இருப்பதாக உக்ரைனின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கியை ‘சர்வாதிகாரி’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ள நிலையில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமைதி மற்றும் நேட்டோ உறுப்புரிமைக்கு ஈடாக தனது பதவியை விட்டுக்கொடுக்க முன்வந்தார்,
உக்ரைன் மீது ரஷ்யாவின் முழு அளவிலான போர் தொடங்கிய மூன்று ஆண்டு நிறைவுக்கு முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவில் உள்ள புதிய அரசாங்கத்திற்கும் தனக்கும் இடையே பிளவு விரிவடைந்து வருவதால் ஜெலென்ஸ்கி இந்த முடிவை வெளியிட்டுள்ளார்.
“உக்ரைனுக்கு அமைதி என்றால், நான் எனது பதவியை விட்டு வெளியேற வேண்டும் என்றால், நான் தயாராக இருக்கிறேன்” என்று ஜெலென்ஸ்கி கூறினார். “அந்த நிபந்தனை இருந்தால், உடனடியாக இதை நான் நேட்டோ விற்கு பரிமாறிக்கொள்ள முடியும்”. என்று அவர் குறிப்பிட்டார்.
Link : https://namathulk.com