நீண்டகாலமாக ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியை அனுபவித்துவந்த 88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் பெப்ரவரி 14 ஆம் திகதி ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இரட்டை நிமோனியாவுடன் போராடும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், சுவாசத்தொற்று அழற்சி காரணமாக ஆபத்தான நிலையில் உள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
“பரிசுத்த தந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது; இருப்பினும், நேற்றிரவு முதல் அவர் மேலும் சுவாச நெருக்கடிகளை அனுபவிக்கவில்லை” என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
இரட்டை நிமோனியா என்பது ஒரு கடுமையான நோய்த்தொற்று ஆகும்.
இது இரு நுரையீரல்களையும் வீக்கமடையச் செய்து, சுவாசிப்பதை கடினமாக்குகிறது. இந்நிலை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது.
2013 முதல் பரிசுத்த பாப்பரசராக திருப்பணி செய்த பிரான்சிஸ், கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
இளம் வயதிலேயே நுரையீரல் அழற்சியை எதிர்கொண்டு நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றியுள்ளமையே நோய் நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.
Link : https://namathulk.com