பேங்கொக்கில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த விமானத்தில் பயணித்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தனது பயண பொதியில் மிக சூட்சுமமான முறையில் குஷ் போதை பொருளை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளமை தெரிய வந்திருக்கின்றது
பயணப் பையை பரிசோதனைக்கு உட்படுத்திய போது சுமார் இரண்டு கிலோ குஷ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த 73 வயதான ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com/