முப்படையில் இருந்து தப்பியோடிய அனைவரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்டா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகளை மூடக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதே தமது பிரதான நோக்கமாகும் என பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் படை வீரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது குறித்து கவலை அடைவதாகவும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்டா தெரிவித்துள்ளார்.
Link : https://namathulk.com