வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று இரவு முதல் சில நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளாது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை வேளையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வட மத்திய, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
பலத்த காற்று மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பை பெற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Link : https://namathulk.com