காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பாலஸ்தீனிய கைதிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேல் விடுவிப்பதிலேயே தங்கியுள்ளது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாசால் விடுவிக்கப்பட்ட ஆறு உயிருள்ள மற்றும் நான்கு இறந்த பணயக்கைதிகளுக்கு ஈடாக 600 ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை விடுவிப்பதைத் தாமதப்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது,
இந்த முடிவு முழு ஒப்பந்தத்தையும் “கடுமையான ஆபத்துக்கு” உட்படுத்தியுள்ளதாகவும், இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறும் மத்தியஸ்தர்களை, குறிப்பாக அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஹமாஸின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதற் கட்டம் மற்றும் தற்காலிக ஆறு வார போர் நிறுத்தம் என்பவை எதிர்வரும் சனிக்கிழமையன்று காலாவதியாவதாகவுள்ளது.
இரண்டாம் கட்டம் மற்றும் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்த மறைமுக பேச்சுவார்த்தைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com