பாதாள உலகக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் தேடப்பட்டுவரும் இஷாரா செவ்வந்தியின் தாயும், சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல் தொடர்பில் அறிந்திருந்தும் அதனை மறைத்தமை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய 23 வயதான சமிந்து திவங்க வீரசிங்க என்ற இளைஞனும், செசந்புர தேவகே சமந்தி என்ற 48 வயதான தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமை இந்த துப்பாக்கி சூடு தொடர்பில் இதுவரை பத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் கடந்த 19 ஆம் திகதி காலை பாதாள உலகக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ குற்றவாளி கூண்டில் ஏறியப்போது அங்கு சென்ற நபரால் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டது.
இதன்போது கனேமுல்ல சஞ்சீவ உயிரிழந்ததுடன், துப்பாக்கிதாரியும் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கிதாரியிடம் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com