வன விலங்குகள் , கால்நடைகள் வீதிகளில் நடமாடுவதால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்க்க முடியாத நிலை காணப்படுகிறது.
வடக்கு மாகாணத்தின் அநேகமான பகுதிகளில் இந்த நிலைக் காணப்படுகிறது.
வன விலங்குகளால் பயிர் செய்கைகள் பாதிப்படைவதோடு, பொதுமக்களின் உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றன.
இவ்வாறன சம்பவம் ஒன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒட்டுசுட்டானில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளின் மீது பெரிய கருங்குரங்கொன்று பாய்ந்துள்ளது.
35 வயதான பெண் தனது 06 மாதக் குழந்தையுடன் கணவனோடு பயணித்த மோட்டார் சைக்கிளிலே குரங்கு பாய்ந்துள்ளது.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் வீதியில் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கணவன் தூக்கி வீசப்பட்ட நிலையில், அகிலன் தனிஷியா என்ற தாய் தனது 06 மாதக் குழந்தையை அரவணைத்தப்படி வீழ்ந்துள்ளார்.
இதன்போது அகிலன் தனிஷியாவிற்கு எவ்வித வெளிக் காயங்களும் ஏற்படாத நிலையில் உடல்நலக் குறைவால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதி மக்களை பெரும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.
Link : https://namathulk.com