நாட்டில் குற்றச்செயல்களை தடுத்து, ஊழல் மோசடிகளை நிறுத்தி சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தூய்மைப்படுத்தலை மாத்திரமின்றி, எதிர்கால தலைவர்களையும் உருவாக்கும் நோக்கில் பாடசாலை மட்டங்கங்களிலும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு அங்கமாக பாடசாலை வகுப்பறைகளை அழுகுபடுத்தி முகாமைத்துவம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் அலங்காரப் போட்டி திருகோணமலை தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இன்று செவ்வாய்கிழமை (25) இடம்பெற்றது.
தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் ,கல்லூரியின் முதல்வருமான ஏ.பீ.ஏ.ஜப்பார் தலைமையில் வகுப்பறை அலங்காரப் போட்டி நடாத்தப்பட்டது.
இதன்போது நடுவர்கள் ஒவ்வொரு வகுப்புகளாகச் சென்று வகுப்பறைகளை பார்வையிட்டு புள்ளிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com