யாழ்ப்பாணம் நெடுந்தீவில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
37 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வீதியில் தலைகீழாக குடைசாய்ந்து நேற்று மாலை விபத்துக்குள்ளகியுள்ளது.
இதன்போது பலத்த காயமடைந்த நபர் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு , அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
Link : https://namathulk.com