அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்திற்கும், கனடாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் எலோன் மஸ்க்கின் கனேடிய குடியுரிமையை இரத்து செய்வதற்கான மகஜரில் இலட்சக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
கனடாவில் யாராவது மோசடி செய்திருந்தாலோ, தங்களை தவறாக சித்தரித்திருந்தாலோ அல்லது குடிவரவு, குடியுரிமை விண்ணப்பத்தில் தெரிந்தே தகவல்களை மறைத்திருந்தால் மட்டும்தான் குடியுரிமையை இரத்து செய்ய முடியும்.
இந்நிலையில் எலோன் மஸ்க் கனடாவின் தேசிய நலனுக்கு எதிராக செயற்படுவதாகவும், அதன் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, குறித்த மகஜரில் மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலோன் மஸ்க், கனேடிய மற்றும் அமெரிக்க குடியுரிமை இரண்டையும் வைத்திருக்கிறார்.
பெப்ரவரி 20 ஆம் திகதி அரம்பிக்கப்பட்ட இந்த கையெழுத்து சேகரிக்கும் மகஜரில், ஏற்கனவே 250,000 க்கும் மேற்பட்ட கனேடியர்களால் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இது ஜூன் 20 வரை கையொப்பங்களுக்காக திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com