காசாவில் கடந்த இரண்டு வாரங்களில் கடும் குளிர் காலநிலை காரணமாகவும், போதுமான தங்குமிடம் இல்லாத காரணத்தாலும் ஆறு குழந்தைகள் இறந்துள்ளதாக பாலஸ்தீனிய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
காசா நகரின் வடக்கில் உள்ள பெனோவோலென்ட் வைத்தியசாலையில் குளிர் காரணமாகப் பாதிக்கப்பட்ட புதிதாகப் பிறந்த ஒன்பது குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஐந்து பேர் இறந்துவிட்டதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தெற்கு நகரமான கான் யூனிஸ் அருகே ஒரே இரவில் குளிர் காரணமாக இரண்டு மாத பெண்குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூடாரங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் வசிக்கும் 945,000 இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்காக எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அவசரமாக தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை ஐந்து வாரங்களுக்கு முன்பு தொடங்கிய போர்நிறுத்தத்தின் போது இஸ்ரேல் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவு கூடாரங்கள் மற்றும் பிற தங்குமிட பொருட்களை அனுமதிக்கத் தவறிவிட்டதாக பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதை இஸ்ரேல் மறுத்துள்ளது.
Link : https://namathulk.com