எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ள தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இன்று மீண்டும் கூடி கலந்துரையாடியுள்ளனர்
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று முற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கட்சிகளின் முதலாவது சந்திப்பு கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்றை சந்திப்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழரசு கட்சி, சமத்துவ கட்சி ஆகிய 8 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.





Link: https://namathulk.com