யானை – மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.
இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தும் , இதுவரையில் எவ்வித தீர்வும் இன்றி காணப்படுகிறது.
இந்நிலையில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க விசேட தொழில்நுட்ப திட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது .
இந்த பின்புலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளது.
திருகோணமலை சம்பூர் பாட்டாளிபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
37 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் இன்று காலை சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com