நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலை தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இலங்கை கடற்படையின் பிரதானிகளுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தேசிய பாதுகாப்பு தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.









Link: https://namathulk.com