ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு சென்றுள்ளார்.
2013 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட பத்து சிறியரக விமானங்களின் கொடுக்கல் வாங்கலில் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தத்தின் ஒரு கட்டத்தில் 16.84 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த ஒப்பந்தத்துடன் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்கிற்கு பெருந்தொகை பணம் மாற்றப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
Link : https://namathulk.com