அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் முதற் பார்வைக்கான (First look) பதாதை வெளியிடப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் குழுமம் தயாரித்துள்ளது.
இத் திரைப்படத்தில் முன்னணி நடிகை ஆண்ட்ரியா மற்றும் வளர்ந்துவரும் நடிகர் கவின் உட்பட ருஹானி ஷர்மா, சார்லி, பாலா சரவணன் மற்றும் வி. ஜே. அர்ச்சனா சந்தோக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஜி. வி. பிரகாஷ் மற்றும் ஆர். டி. ராஜசேகர் ஆகியோர் இசையமைப்பாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் இடம்பெற்றுள்ள நிலையில் எஸ். பி. சொக்கலிஂகத்தின் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெற்றிமாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
Link : https://namathulk.com