யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் அண்மையில் தீயில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
உயிரிழந்த பெண்ணின் தந்தையால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது மகளின் உடலில் தீ பற்றிய விதம் தொடர்பில் சந்தேகம் காணப்படுவதாக முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் காணப்படும் நிலையில் இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் எனவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை செய்யுமாறு முறைப்பாட்டாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் ஒன்றில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதீஸ் தமிழினி என்ற பெண் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 17ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.
Link : https://namathulk.com