காசாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையிலான போர் நிறுத்த நடவடிக்கைகளில் இறுதி பரிமாற்றத்தைக் குறிக்கும் வகையில் இஸ்ரேலால் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவதற்காகக் காத்திருந்தபோது, இஸ்ரேலிய பணயக்கைதிகள் நான்கு பேரின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
காசாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையான போர்நிறுத்தம் ஜனவரி 19 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது.
அதன் முதற்கட்டம் இந்த வாரம் முடிவடைய உள்ள நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும்,எஞ்சியுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான ஒரே வழி போர்நிறுத்தத்திற்கான உறுதிப்பாட்டின் மூலம் மட்டுமே என்றும் ஹமாஸ் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்தவாரம் 04 கைதிகளின் உடல்கள் உள்ளடங்கலாக ஆறு பிணைக் கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்ததை அடுத்து, கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மறுத்துவிட்டது.
இஸ்ரேலுக்கு கடைசியாக சடலங்களாக அனுப்பப்பட்ட நான்கு பேரின் மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்கும் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, காசாவில் சுமார் 30 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்வரும் சனிக்கிழமையன்று காலாவதியாகும் 42 நாள் யுத்த நிறுத்தத்துடன், மீதமுள்ள 59 பணயக்கைதிகளில் அதிகமானவர்கள் விடுவிக்கப்படுவதைக் காணக்கூடிய ஒரு நீட்டிப்பு நடக்குமா அல்லது ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்க முடியுமா என்ற விடயம் குறித்து இதுவரை எவ்வித தெளிவும் இல்லை.
Link : https://namathulk.com