முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட நிதி தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று தரவுகளை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட நிதி தொடர்பில் தனித் தனியாக பிரதமர் கூறியுள்ளார்.
- மஹிந்த ராஜபக்ச 2010 முதல் 2014 வரை – 3,572 மில்லியன் ரூபா
- மைத்திரிபால சிறிசேன – 2015 முதல் 2019 வரை – 384 மில்லியன் ரூபா
- கோத்தபய ராஜபக்ஷ – 2020 முதல் 2022 வரை – 126 மில்லியன் ரூபா
- ரணில் விக்கிரமசிங்க – 2023 மற்றும் 2024 வரை – 533 மில்லியன் ரூபா
- அநுர குமார திசாநாயக்க – செப்டம்பர் 2024 முதல் பெப்ரவரி 2025 வரை – 1.8 மில்லியன் ரூபா
பிரதமரால் வெளியிடப்பட்ட தரவுகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் 2013 ஆம் ஆண்டில் அதிகளவு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 1,144 மில்லியன் ரூபா என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
Link: https://namathulk.com