ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 mm மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் 75 mm மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றும் சற்று பலமாக வீசக்கூடும்
மின்னல் தாக்கம் உள்ளிட்ட பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பை பெறுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.