புதிய கூட்டணியில் இணைந்துகொள்வது குறித்து தமிழ் மக்கள் கூட்டணி இதுவரை இறுதி முடிவினை எடுக்கவில்லை என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் கட்சிகளின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைத்துள்ளன.
குறித்த கட்சிகளின் முதலாவது சந்திப்பு கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com