இலங்கை – இந்திய மீனவப் பிரச்சினை தொடர் கதையாகவே அமைந்துள்ளது.
இராஜதந்திர ரீதியில் இந்த விடயத்தை அணுக வேண்டும் என அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர்.
எனினும் எல்லைமீறும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து , உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
இவ்வாறன கைதுகளுக்கு எதிராக இந்தியாவிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்திய மீனவர்களின் இழுவைமடி உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றுள்ளது .
யாழ் மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கத்தின் ஊடாக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமது கோரிக்கை அடங்கிய மகஜரை யாழ்ப்பாணத்திலுள்ள கடற்றொழில் திணைக்களத்தில் கையளித்த மீனவர்கள் அங்கிருந்து பேரணியாக இந்திய துணை தூதரகம் வரை பயணித்தனர்.
இதன்போது கலகம் அடக்கும் பிரிவினர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை அண்மித்த பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மீனவ பிரதிநிதிகளை சந்திக்க அனுமதி கிடைத்த நிலையில் தங்களின் கோரிக்கை மகஜருடன் , இந்திய துணைத்தூதரகத்திற்குள் சிலர் சென்றுள்ளனர்.
Link : https://namathulk.com