இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த வருடம் உரியிழந்தார் .
உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி சாந்தன் உயிரிழந்தார்.
அன்னாரின் நினைவேந்தல் இன்று நடைபெற்றதுடன், அவரின் நினைவாக துயிலாலயம் திறந்துவைக்கப்பட்டது.
சாந்தனின் தாயார் அந்த நினைவாலயத்தை தீபம் ஏற்றி, மலர்மாலை அணிவித்து திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
நினைவேந்தலில் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகனும் கலந்துகொண்டார்.
இந்த துயில் ஆலயம், வல்வெட்டித்துறை எள்ளங்குளம் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.