vஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த இன்று முக்கிய உரையை ஆற்றவுள்ளார்.
தெற்காசியாவின் பூகோள அரசியல் நிலப்பரப்பு, பொருளாதார சவால்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்தியாவுக்கு புறப்பட்டார்.
இராஜதந்திரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார்.
Link : https://namathulk.com