சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனிடம் 20,000 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாணந்துறை பகுதியை சேர்ந்த 31 வயதான இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com