குருநாகல் ஹெட்டிபொல மகுலாகம பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான 09 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் பாட்டியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பன்றிகளை வேட்டையாட சென்றவர்களால் நேற்றிரவு இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகிய சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து வேட்டையாட பயன்படுத்தப்படும் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com