பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலைக் காரணமாகவே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பதுளை மாவட்டத்தின், பசறை, ஹாலி -எல, பதுளை , கந்தேகெட்டிய, ஊவா பரணகம , மீகாஹாகிவுள்ள மற்றும் சொரனாத்தொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவிற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
Link : https://namathulk.com