இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ரமழான் நோன்பை எதிர்வரும் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் ஆரம்பிக்கலாம் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இன்று தலைப்பிறை தென்படவில்லை என இதன்போது அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய மார்ச் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் ஆரம்பிக்கலாம் நோன்பை ஆரம்பிக்கலாம் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.