நீண்ட காலமாக லெபனான் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஹிஸ்புல்லா, கடந்த ஆண்டு இஸ்ரேலுடனான போரில் மோசமாக நசுக்கப்பட்டதிலிருந்து லெபனானின் அரசியல் நிலை மாற்றமடைந்துள்ளது.
லெபனான் நாட்டில் புதிய அரசாங்கம் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை வென்றுள்ளது.
128 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் நவாப் சலாமின் அரசாங்கம் 95 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
பிரதமர் நவாப் சலாம் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதாகவும் உறுதியளித்தார்.
புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில், லெபனானைப் பாதுகாப்பதில் ஹிஸ்புல்லாவின் பங்கை நியாயப்படுத்துவதாகக் கருதப்பட்ட முந்தைய ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட மொழி சேர்க்கப்படவில்லை.
லெபனான் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி 08 ஆம் திகதி லெபனான் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்திருந்தது.
Link : https://namathulk.com