இரவிரவாக வீதியில் காத்திருக்கும் வாகன சாரதிகள்
திங்கட்கிழமைக்கு பின்னர் எரிபொருள் கிடைக்காது என விநியோகஸ்தர்கள் அறிவிப்பு
போதுமான எரிபொருள் கையிருப்பில் உண்டு – துறைசார் அமைச்சு தகவல்
உண்மையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடா??
நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை என தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனில் ஜெயந்த பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளை அவதானிக்க கூடிய நிலையில் அமைச்சர் இன்று இதனை கூறியுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கான வரிசை யுகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் எரிபொருள் கிடைக்காது என விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
அதற்கமைவாக, எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனில் ஜெயந்த, நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லையென தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது எரிபொருள் நிலையங்களில் நிற்கும் நீண்ட வரிசை உண்மையான பற்றாக்குறையினால் தோன்றியதாக இல்லையெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டில் பற்றாக்குறை இருப்பதாக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Link: https://namathulk.com