கடந்த சில நாட்களாக பரபரப்பு விடயமாக காணப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரத்தில் நாளுக்கு நாள் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் இடைவிடாத விசாரணைகளில் ஒவ்வொரு நாளும் திடுக்கிடும் தகவல்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன.
பாதாள உலகக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ கடந்த மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
உரிய விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
ஆனாலும்….. இந்த கொலையுடன் தொடர்புடைய விடயங்கள் இதுவரை அடங்கவில்லை .
கட்டுக்கடங்காத வகையில் திரைப்பட பாணியில் இந்த கொலை திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக துப்பாக்கிப் பிரயோகத்தை வழிநடத்த பயன்படுத்தப்பட்ட சிம் அட்டை தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து குறித்த சிம் அட்டைகளை கொள்வனவு செய்து, சந்தேகநபர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மினுவங்கொட பகுதியை சேர்ந்த 28,31 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அதற்கமைய கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Link : https://namathulk.com