நிலவும் மழையுடனான வானிலையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அத்துடன், மழையுடனான வானிலை எதிர்வரும் 03ஆம் திகதி வரை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலையில், தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கந்தகெட்டிய, ஊவா பரணகம, மீகஹாகிவுல மற்றும் சொரணாதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்போரும், நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவில் வசிப்போரும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று நண்பகல் 12.30 மணி முதல் நாளை நண்பகல் 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
Link : https://namathulk.com