தொடரும் மழையுடனான வானிலையால், காலி, இரத்தினபுரி, கேகாலை, பதுளை மாவட்டங்களை சேர்ந்த 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கம், பலத்த காற்று, மரம் முறிவு போன்ற அனர்த்தங்களினால், மேற்படி மாவட்டங்களை சேர்ந்த 175 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சப்ரகமுவ மாகாணத்தின், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களை சேர்ந்த மக்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், நிலவும் சீரற்ற வானிலையால் 164 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழையுடனான வானிலை எதிர்வரும் 03ஆம் திகதி வரை தொடரும் என வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதோடு, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com