அனுமதிபத்திரமின்றி ஒரு தொகை மருந்து வில்லைகளுடன் நீர்கொழும்பில் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னாரை சேர்ந்த 30 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கூறியுள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 05 இலட்சம் மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Link: https://namathulk.com