பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்த்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, இலங்கைக்கு உடனடி நிதி வசதியாக 336 அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு, 48 மாத கால நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்ததன் அடிப்படையில், நான்காவது தவணைக்கான நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த திட்டத்தின் கீழ், சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியதவி 1.34 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த திட்டத்தின் கீழ், இலங்கையின் செயல்பாடு மிக வலுவாக உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், சமீபத்தில் நிறைவுச் செய்யப்பட்ட கடன் மறுசீரமைப்பு பணிகள், கடன் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கான பாதையில் வெற்றிகரமான முடிவாக உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
Link: https://namathulk.com
