அண்மைக்காலமாக இலங்கை மத்திய வங்கியின் பெயரை பயன்படுத்தி பல்வேறு விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருகின்றமையை அவதானிக்க முடியும்.
இதனடிப்படையில், மரங்கள் நடுவதன் மூலம் மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கலாம் எனும் விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதனடிப்படையில், இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றினை வழங்கியுள்ளது.
இதன்படி, மரங்கள் நடுவதன் மூலம் மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படும் முதலீட்டு வாய்ப்புகள் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக இருக்கலாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான மோசடித் திட்டங்களில் ஈடுபட்டு பணத்தை இழந்து விட வேண்டாம் எனவும் மத்திய வங்கி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Link: https://namathulk.com