கடந்த இரண்டு நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில், மிக நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக மக்கள் காத்திருந்த நிலையானது, மீண்டும் எரிபொருள் வரிசை யுகம் ஆரம்பித்து விடுமோ என்ற அச்சத்தினை அனைவர் மனதிலும் ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில், பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனில் ஜெயந்த, நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை எனவும், இது ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு எனவும் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைவாக, எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமைக்கு திரும்பம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே ராஜகருணா தெரித்துள்ளார்.
மேல் மாகாணத்திலிருந்து ஏற்கனவே சுமார் 500 எரிபொருள் பவுசர்களுக்கான முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இருக்காது எனவும், வதந்திகளை நம்பி பொதுமக்கள் வரிசையில் நின்றால் இவ்வாறான பிரச்சினைகள் தலைதூக்கும் எனவும் கூறினார்.